புதுச்சேரி அரசு
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

GOVERNMENT OF PUDUCHERRY

DEPARTMENT OF WOMEN AND CHILD DEVELOPMENT

  முகப்பு திட்டங்கள் கழகம் விடுதி

தொடர்பு கொள்ள

 

 

 

 
 
அறிமுகம்
 

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 16-08-1996 அன்று புதுச்சேரி அரசு, சமூகநலத்துறையிலிருந்து பிரிக்கப்பட்டது.  குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனில் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்துறையின்  நோக்கமாகும்.  துறையின் நிர்வாக அமைப்பு, மக்களுக்காக செயல்படுத்தப்படும்  பல்வேறு நலத்திட்டங்கள் போன்றவை பொதுமக்களின் தகவலுக்காக  இவ்விணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 
துறையின் நோக்கங்கள்
 

             சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கான உதவிகளை வழங்குதல்.

 
பயனடைவோர்
 
i)     6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
ii)    கர்ப்பிணிப் பெண்கள் 
iii)   பாலூட்டும் தாய்மார்கள்
iv)    விதவைகள்/ஆதரவற்றப் பெண்கள்
v)     வளரினப் பெண்கள்
vi)    வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள்
vii)   முதியவர்
viii)  மகளிர்
 
துறையின் பல்வேறு பிரிவுகள்
 
.    ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டப்பிரிவு
 

              ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டமானது மத்திய அரசின் திட்டமாகும்.  இத்திட்டத்தின் கீழ் இளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் சத்துணவு வழங்கப்படுகிறது.  இப்பிரிவு திட்ட அதிகாரியின் கீழ்  செயல்படுகிறது.

 
.   மகளிர் நலம் பிரிவு
 

              பெண்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக பல்வேறு  நலத்திட்டங்கள் இப்பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.  இது மட்டுமின்றி மகளிர்  மேம்பாட்டுக்கழகம், மங்களம் திட்டம், மகளிர் ஆணையம் போன்ற நிறுவனங்கள்  இப்பிரிவின் கீழ் இயங்குகின்றன.  துணை இயக்குநர் (மகளிர் நலம்) இப்பிரிவின்  அதிகாரியாக செயல்படுகிறார்.

 
.    சமூகப் பாதுகாப்பு பிரிவு
 

              வயது முதிந்தவர்களையும், பொருளாதார நிலையில் பின்  தங்கியவர்களையும் பாதுகாக்கும் நோக்கோடு இப்பிரிவின் கீழ் பல்வேறு  நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இப்பிரிவின் அதிகாரி துணை இயக்குநர்  (சமூக நலம்) ஆவார்.

 

பின்